அஆவ்வ்!

இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும் பொது பாராளுமன்றமும், நமது அரசு அலுவலகங்களும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல!

COMMENT பகுதியில் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

Advertisements

கவனம்! விபத்துக்கள் ஜாக்கிரதை! Beware of Accidents!!


இந்தியாவிலேயே அதிகம் உயிரிழக்க காரணம் விபத்துக்கள் தான்.அதுவும் கடந்த பத்து நாட்களாக நாளிதழ்களை பார்த்தாலே நிம்மதியாக உணவருந்த முடிவதில்லை. அதுவும் தரம் உயர்த்தப்பட்ட சாலைகளால் அதி வேகமான பயணம் பலரை காவு வாங்குகிறது.


நண்பர்களே வாழ்க்கை ஒரு முறை தான் வாழ்ந்து காட்டுவோம் அதிலும் வென்று காட்டுவோம், பயணங்களில் அதி கவனம் செலுத்துவோம்..வேகத்தை குறைப்போம். விபத்தை தவிர்ப்போம்..


இரவு பயணங்களை   தவிர்ப்போம், இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை.
(அப்போதுதான் ஆம்னி பேருந்துகளும், மீன் பாடி வண்டிகளும், தூதஞ்சல் வாகனங்களும்,மணல் லாரிக்களுமான எமன்களிடம் இருந்து தப்பிக்கலாம்)


நேரத்தை  இலக்காகிக்  கொண்டு வாகனத்தை செலுத்தாது மிகவும் பாதுகாப்பான வேகத்தில்

(கவனிக்க!- பாதுகாப்பான வேகம் என்று ஒன்று இல்லை.-நெடுஞ்சாலைத் துறை) கவனம் செலுத்தி வாகனத்தை இயக்குவோம்.


பளிச்சிடும் முகப்பு விளக்குகளை பயன் படுத்த வேண்டாம்.


வாகனங்களில் உள்ள சிறு குறைகளைக் கூட அவ்வபோது சரி செய்து கொள்வோம்.அஜாக்கிரதையான சில விஷயங்கள் பெரிய விபத்துக்களில் கொண்டு பொய் விடும்.


தொடர்ச்சியான பயணம் நம்மை களைப்படைய வைக்கும் அதனால்  பயண நேரத்தின் பொது அவ்வபோது இடைவெளிகளில் இளைப்பாறிச் செல்வோம்.


எல்லாவற்றையும் விட நம் உயிர்  நமக்கு முக்கியம் நம்மை நம்பி  குடும்பம் இருக்கின்றது என்ற நினைப்பிலேயே வாகனத்தை  இயக்குவோம்.(முடிந்தால் நம் குடும்ப புகைப் படம் மற்றும் நம் குழந்தைகளின் படத்தை நம் வாகனங்களின் உள் முகப்பில் எப்போதும் வைத்திருப்போம்.)


உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி..

tamilpuravi@gmail.com

COMMENT பகுதியில் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.