ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

ஸ்பெக்ட்ரம் என்பது அடிப்படையில் மனிதர்கள் உருவாக்குவது அல்ல. அது தண்ணீர், பால், மணல், மலைகளைப்போல் ஒரு இயற்கைச் செல்வம். அதாவது கம்பி வழியாக மின்சாரம் பாய்வதைப்போல வளிமண்டலத்தின் வழியாக (காற்றணுக்கள்) மின்காந்த அலைகள் பரவுகின்றன. இந்த மின்காந்த அலைகள் மூலமாகத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற வானொலி, தொலைக்காட்சி, செல்லிடைப்பேசி முதலானவை இயங்குகின்றன.

FM(30)                                 2G(30)                                    3G(8)
ஸ்பெக்ட்ரம்                    ஸ்பெக்ட்ரம்                      ஸ்பெக்ட்ரம்
–|——————|——–IV——-|———————–|———-IV——-|——————–|—85mhz           110mhz           710mhz            1880mhz              1920mhz           2170mhz

மேற்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களுக்கு உட்பட்ட இடைவெளியை அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) என்றழைக்கிறோம். அப்படியாக 1710 Mhz முதல் 1880 Mhz க்கு உட்பட்ட பகுதி 2G (இரண்டாம் தலைமுறை) ஸ்பெக்ட்ரம் என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஊரில் / இடத்தில் மேற்கூறிய இடைவெளியில் சுமார் 10 நிறுவனங்கள் தான் 2G சேவையை வழங்க முடியும்.. 3G-யை 7 அல்லது 8 நிறுவனங்கள் தான் வழங்க முடியும். இந்தப் பற்றாக்குறையையும், மக்கள் தேவையையும், மற்ற செல்போன் நிறுவனங்களின் சந்தைப்போட்டியையும் பயன்படுத்தி அலைக்கற்றை ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளது.
நடந்தது என்ன?

செல்போன் சேவைக்குத் தேவைப்படும் அலைக்கற்றையை செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் வழங்குகிறது. மத்திய அமைச்சர் ! அதிகாரிகள் தனியார் செல்போன் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் செய்து தங்கம் போல மதிப்பு மிக்க இந்த அலைக்கற்றை லைசென்சை தகரத்தின் விலைக்கு விற்றுள்ளனர். 2001ல் அலைக்கற்றை விலைக்கே 2008லேயும் விற்கப்பட்டுள்ளது (2001ல் வாங்கிய தங்கள் நிலத்தினை 2008ல் விற்கும்போது 2001 விலைக்கே விற்பார்களா?).
இதனால் அரசாங்கத்திற்கு ரூ.1.76 இலட்சம் கோடி (ரூ.17,60,00,00,00,000) இழப்பு ஏற்பட்டுள்ளது (சி.ஏ.ஜி. அறிக்கை) .

இந்த ஊழல் தொகை நமது தமிழக அரசின் மூன்றாண்டு பட்ஜெட்டுக்குச் சமமானது. அதாவது, எந்த வரியும் வசூலிக்காமல் தமிழக அரசை மூன்றாண்டுகளுக்கு நடத்தலாம்.